உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலி தங்க காசு மோசடி; எஸ்.பி.யிடம் புகார் மனு

போலி தங்க காசு மோசடி; எஸ்.பி.யிடம் புகார் மனு

கடலுார்; கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் போலி தங்க காசுகளை கொடுத்து, ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக, புவனகிரி நபர், எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்துள்ளார்.கடலுார் எஸ்.பி.,அலுவலகத்தில், மேல்புவனகிரியை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் கொடுத்த மனு:சென்னையில் தனியார் டைல்ஸ் கம்பெனியில் வேலை செய்தபோது, கர்நாடகா மாநிலம், பெல்லாரியை சேர்ந்த நபர் ஒருவர் அறிமுகமானார். அவரிடம் பழங்கால தங்க காசுகள் இருப்பதாகவும், குறைந்த விலைக்கு தருவதாக கூறினார். கடந்த மாதம் விருத்தாசலத்தில் சந்தித்து மூன்று தங்க நாணயங்களை கொடுத்தார்.அதை சரிபார்த்தபோது உண்மையான தங்கம் என தெரிந்தது. தன்னுடைய சொந்த ஊருக்கு மூன்று லட்ச ரூபாய் எடுத்து வந்தால், 300 தங்க காசுகள் தருவதாக தெரிவித்தார். இதை நம்பி கடந்த 12ம் தேதி, மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து 300காசுகளை பெற்று வந்தேன். அவற்றை சரிபார்த்தபோது போலி என தெரிந்தது. போலி தங்க காசுகளை கொடுத்து ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை