உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

குள்ளஞ்சாவடி; விவசாயி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் வெங்கட்டம்மாள்புரம் காலனியை சேர்ந்தவர் சண்முகம், 50; விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த இளநீர் வியாபாரி ஒருவரிடம் ரூ. 25 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். சண்முகம் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, கொடுத்த கடனை கேட்டு வியாபாரி தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை