மேலும் செய்திகள்
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
01-Oct-2025
கடலுார்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் பிரகாஷ், மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திரன், ரமேஷ்பாபு, பொருளாளர்கள் ராமச்சந்திரன், கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, மாநிலக்குழு வாஞ்சிநாதன், பன்னீர், துணை செயலாளர் லோகநாதன், துணைத்தலைவர்கள் ராஜேஷ் கண்ணன், மணி, செல்வக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர் அரசின் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பர்களுக்கு வகை மாற்றம் செய்து ப ட்டா வழங்க வேண்டும். தமிழகத்தில் அனைவருக்கும் சொந்த வீடு திட்டத்தை அறிவித்து மாநில அரசு செய ல்படுத்த வேண்டும். மாநிலம் முழுதும் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் சமூக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
01-Oct-2025