உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீவன அபிவிருத்தித் திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தீவன அபிவிருத்தித் திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

கடலுார்: மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கால்நடைகளின் பராமரிப்பு செலவினை குறைப்பதில் பசுந் தீவனம் முக்கிய பங்கேற்கிறது. அதிக மகசூல் தரக்கூடிய தீவன சோளம், தட்டைப்பயிறு, வேலிமசால் போன்ற அதிக புரதசத்து நிறைந்த பயிர்களை இறவையிலும், மானாவாரியிலும் பயிர்செய்து, கறவை மாடுகளுக்கு வழங்குவதன் மூலம் அடர்தீவனத்தின் தேவை குறைந்து பால் உற்பத்திக்கான செலவினம் குறையும்.விவசாயிகளின் வாழ்க்கை தரத்தினை சீராக மேம்படுத்தும் நோக்கத்துடன் நீர்ப்பாசன வசதி உள்ள நிலங்களில் பசுந்தீவனம் சாகுபடி செய்தல் நீர் பாசன வசதி உள்ள நிலங்களில் பசுந்தீவனம் சாகுபடி செய்ய தீவன சோளம் மற்றும் வேலிமசால் சாகுபடி செய்ய முழு மானியத்துடன் கூடிய விதைகள் 1 ஏக்கருக்கு முறையே 1.5 கிலோ மற்றும் 2 கிலோ இலவசமாக வழங்கப்படும்.ஒரு விவசாயி ஒரு ஏக்கர் வரை பயன் பெறலாம். குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை தீவனப் புற்களை பராமரிக்க வேண்டியது கட்டாயம். மானாவரி நிலங்களில் பசுந்தீவனம் சாகுபடி செய்தல் மானாவரி நிலங்களில் பசுந்தீவனம் சாகுபடி செய்ய ஏக்கர் ஒன்றிற்கு தீவன சோளம் 12 கிலோ மற்றும் தட்டைப்பயிர் 4 கிலோ விதைகள் முழு மானியத்துடன் இலவசமாக வழங்கப்படும். ஒரு விவசாயி 2 ஏக்கர் வரை பயன் பெறலாம்.ஒரு புல் நறுக்கும் கருவியின் விலை 32,000 ரூபாய். 50 சதவீதம் அரசு மானியம் 16,000 ரூபாய் வழங்கப்படும். விருப்பமுள்ள கால்நடை விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை நிலையங்களை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை