மேலும் செய்திகள்
கர்ப்ப கால சர்க்கரை நோயை எதிர்கொள்வது எப்படி
21-Sep-2025
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி ஆலை, இலவசமாக சர்க்கரை வழங்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் ஆண்டுதோறும் பல லட்சம் டன் கரும்பு சப்ளை செய்கின்றனர். விவசாயிகள் சப்ளை செய்யும் ஒரு டன் கரும்புக்கு அரை கிலோ சர்க்கரை ஆண்டுதோறும் வெளிமார்க்கெட்டை விட குறைந்த விலையில் ஆலை நிர்வாகம் வழங்கி வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் சங்கம் திருமலை கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் விவசாயிகளுக்கு சர்க்கரை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். மாநில அரசு கரும்புக்கு அறிவித்த விலையில் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய்க்கு மேல் ஆலை நிர்வாகம் பாக்கி வைத்துள்ளது. இதற்காகவே விவசாயிகளுக்கு சர்க்கரையை இலவசமாகவே வழங்கலாம். ரேஷன் கடையில் மக்களுக்கு வழங்கும் கிலோ 25 ரூபாய்க்கும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு நிர்வாகம் சர்க்கரை வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் சர்க்கரை வழங்குவதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த ஆண்டு முன்கூட்டியே சர்க்கரை வழங்க வேண்டும்' என்றார்.
21-Sep-2025