நாளை விவசாயி குறைகேட்பு கூட்டம்
கடலுார்; விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது. 2024ம் ஆண்டு டிசம்பர் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை ( 20ம் தேதி) புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடக்கிறது. கடலுார் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். காலை 8.00 மணிமுதல் 10.00 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும். கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.