கடலுாரில் வரும் 25ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு
கடலுார் : கடலுார் மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டம் வரும் 25ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏப்ரல் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள்மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 25ம் தேதி கலெக்டர் அலுவலகம் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண்மை சார்ந்த குறைகளை கோரிக்கைகளாக வைக்கலாம். கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் அன்று காலை 8:00 மணிக்கு கூட்டரங்கில் தங்களது பெயர் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.