உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ் மீண்டும் இயக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி

அரசு பஸ் மீண்டும் இயக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி

நடுவீரப்பட்டு: குறிஞ்சிப்பாடியிலிருந்து நடுவீரப்பட்டு, பண்ருட்டி வழியாக சென்னைக்கு அரசு பஸ் மீண்டும் இயக்கப்பட்டது.குறிஞ்சிப்பாடியிலிருந்து நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், பண்ருட்டி வழியாக அரசு பஸ் தடம் எண் 161 அதிகாலை 4:30 மணிக்கு கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்டது. இந்த பஸ் கடந்த சில ஆண்டுகளாக எவ்வித அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது.நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் தோட்டப்பயிர்கள் மற்றும் மா, பலா பழங்களை பண்ருட்டி கடைகளில் விற்க இந்த பஸ்சில் எடுத்து சென்று வந்தனர். பஸ் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து பண்ருட்டி எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் நேற்று காலை முதல் மீண்டும் அரசு பஸ் தடம் எண் 161 இயக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி