உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகள் மக்கள் கட்சி திட்டக்குடியில் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் மக்கள் கட்சி திட்டக்குடியில் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கோடங்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் தலைவர் பேரின்பம் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், 'பெஞ்சல்' புயல் மற்றும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்க அரசு நிர்ணயித்த 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். கடலுார் மாவட்டத்தை இயற்கை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.இதேபோன்று, தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில், நாவலூரில் மாநில துணை செயலாளர் முருகானந்தம், சிறுமுளையில் பஞ்சமி நில மீட்பு மாநில துணை செயலாளர் பெரியசாமி, பெருமுளையில் ஒன்றிய தலைவர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் அந்தந்த பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ