நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் மனு
கடலுார் : நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் மனு அளித்தனர். இதுகுறித்து கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், விருத்தாசலம் அடுத்த இருளக்குறிச்சி, மோகாம்பரிக்குப்பம் கிராம விவசாயிகள் அளித்த மனு: இருளக்குறிச்சி, மோகாம்பரிக்குப்பம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் 400 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு அறுவடை செய்தோம். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் கொள்முதலுக்கு தயாராக உள்ளது. இப்பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை மனு கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் உடன டியாக அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.