மேலும் செய்திகள்
மின்பாதை இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை
08-Oct-2025
விருத்தாசலம்: விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்டக்குடி அடுத்த கழுதுார், அரியநாச்சி கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த நால்வர் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு, விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், மின்னல்தாக்கி விவசாயிகள் உயிரிழப்பு சம்பவம் தொடர்கிறது. எனவே, இறந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது வேதனை அளிக்கிறது. மின்னல் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். அமைச்சர் கணேசன் சொந்த கிராமத்தில் இறப்பு நிகழ்ந்தும், ஒரு வாரமாகியும் நிவாரண நிதி வழங்கப்படாதது கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அந்தோணிராஜிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அப்போது, கழுதுாரில் இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கிய 5 லட்சம் ரூபாய்க்கான அரசாணை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
08-Oct-2025