உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் குழாய் உடைப்பு விவசாயிகள் அவதி

குடிநீர் குழாய் உடைப்பு விவசாயிகள் அவதி

கடலுார்: சேடப்பாளையத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வழிந்தோடி நிலங்களில் தேங்கி நிற்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கடலுார் அடுத்த சேடப்பாளையம் காஸ் குடோன் எதிரில் குடிநீர் குழாயில், உடைப்பு ஏற்பட்டு பல மாதங்கள் ஆகிறது. இதன் காரணமாக குடிநீர் வழிந்தோடி அருகில் உள்ள நிலங்களில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்து ள்ளது. இதன் காரணமாக குடிநீர் நாளுக்கு நாள் அதிகளவில் வழிந்தோடுகிறது. குறிப்பாக, நிலப்பகுதி எப்போதும், ஈரப்பதமாக இருப்பததால் வேலிகள் துருப்பிடித்து வீணாகிறது. பயிர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இனியாவது, குடிநீர் குழாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை