மேலும் செய்திகள்
பைக் திருடியவர் கைது
06-Nov-2025
புதுச்சத்திரம்: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். புதுச்சத்திரம் அடுத்த ஆதிநாராயணபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தவேல் மகள் பத்மஸ்ரீ, 19; நர்சிங் கல்லுாரி மாணவி. நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து ஆனந்தவேல் கொடுத்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு வழக்கு புதுச்சத்திரம் அடுத்த சின்னாண்டிக்குழியை சேர்ந்தவர் பாலமுருகன் மகள் காயத்ரி, 19; கல்லூரி மாணவி. நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் லலிதா கொடுத்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
06-Nov-2025