மேலும் செய்திகள்
மகள் மாயம் தாய் புகார்
26-Sep-2026
கிள்ளை: மகளை காணவில்லை என தந்தை போலீசில், புகார் செய்துள்ளார்.கிள்ளை சிசில் நகரை சேர்ந்தவர் மூர்த்தி, 40; இவரது, மகள் பவானி, 19; இவர்,செல்போனில் தொடர்ந்து பேசிவந்ததை மூர்த்தி கண்டித்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி மூர்த்தி, கடலுக்கு சென்று மீன் பிடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தப்போது பவானியை, காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மூர்த்தி கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப்பதிந்து, பவானியை, தேடிவருகின்றனர்.
26-Sep-2026