மேலும் செய்திகள்
கடலுார் சிறையில் சோதனை மொபைல் போன் பறிமுதல்
25-Sep-2024
கடலுார், : பைக் மீது கார் மோதிய விபத்தில் மகன் கண்ணெதிரில் தந்தை இறந்தார்.கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த சி.புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் தேவராஜ், 42; இவரது மகன் சஞ்சய், 18; இருவரும் பைக்கில் நேற்று கடலுார் வந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை தேவராஜ் ஓட்டினார். கடலுார், சிப்காட் அடுத்த பூண்டியாங்குப்பம் அருகில் வந்த போது, பின்னால் வந்த கார் திடீரென பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த சஞ்சய் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25-Sep-2024