உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்

மகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்

பண்ருட்டி : மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். பண்ருட்டி, அவ்வை புதுத் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை. அ.தி.மு.க., நகர அவை தலைவர். இவரது மகன் மணிகண்டன் 47; பட்டாணி வியாபாரம். இவரது மனைவி பிரியா, 42; தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. நேற்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த பிரியா மாடியில் உள்ள அறையில் சென்று துாக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடினார். தகவலறிந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து பிரியாவை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பிரியா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி