உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

நெல்லிக்குப்பம்; பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார்.விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் மனைவி சந்தியா,27.இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சந்தியா தனது குழந்தையுடன் வந்து தங்கினார்.வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த சந்தியா நேற்று வீட்டில் துாக்கு போட்டு இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இறந்த சந்தியாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா என்பது குறித்து ஆர்.டி.ஓ., விசாரனை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை