மேலும் செய்திகள்
குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு
12-Oct-2026
குறிஞ்சிப்பாடி: குடும்ப தகராறில் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ் குறிஞ்சிப்பாடி அடுத்த எல்லப்பன்பேட்டையை சேர்ந்தவர் ஜோதிபாசு. இவரது மனைவி சவுமியா,31; காதலித்து திருமணம் செய்து கொண்ட இத்தம்பதிக்கு தலா ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் 25ம் தேதி தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சவுமியா, வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடன் அவரை காப்பாற்றி, குறிஞ்சிப்பாடி அரசு மற்றும் வடலுார் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பின், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12-Oct-2026