உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பழைய கட்டடங்களை இடிக்க ஏலம் கட்சிகள் இடையே கடும் போட்டி

பழைய கட்டடங்களை இடிக்க ஏலம் கட்சிகள் இடையே கடும் போட்டி

கடலுார் கடலுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த பாழடைந்த கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கான பொது ஏலத்தில் கடும் போட்டி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கடலுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 பாழடைந்த கட்டடங்கள் உள்ளன. இவற்றை இடித்து அகற்றுவதற்கான பொது ஏலம் நேற்று விடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தன. அதையொட்டி தி.மு.க.,- தே.மு.தி.க.,- பா.ஜ.,-பா.ம.க.,-த.வா.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் என, 50க்கும் மேற்பட்டோர் ஏலம் எடுக் க காலை திரண்டனர். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மோகன் தலைமையில் ஊழியர்கள் ஏலத்தை தொடங்க தயாராகினர். அப்போது அங்கு திரண்டிருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றதால் பரபரப்பு நிலவியது. உடன், அதிகாரிகள் ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் வங்கியில் பணம் செலுத்திய காசோலை சமர்ப்பித்தால் மட்டுமே ஏலத்தில் பங்கேற்கலாம். மற்றவர்கள் இங்கு நின்று கொண்டு இடையூறு செய்யக் கூடாது எனக் கூறினர். அதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கூட்டமாக நின்றவர்களை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி