உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குறுவை நெல் மூட்டைகள் இறுதிக்கட்ட கொள்முதல்

 குறுவை நெல் மூட்டைகள் இறுதிக்கட்ட கொள்முதல்

விருத்தாசலம்: சம்பா அறுவடை துவங்க உள்ள நிலையில், குறுவையில் எஞ்சிய நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு நெல், உளுந்து, வேர்க்கடலை, எள், உளுந்து, ஆமணக்கு, தேங்காய்பருப்பு உள்ளிட்ட வேளாள் விளைபொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது, சம்பா சாகுபடி செய்த விவசாயிகள், ஜனவரி மாதத்தில் அறுவடை துவங்க உள்ளனர். இதனால் மார்க்கெட் கமிட்டிக்கு வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், குறுவைக்கு அறுவடை செய்து, தேக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் பி.பி.டி., ரகம் 300 மற்றும் ஏ.எஸ்.டி., 16 ரகம் 170 மூட்டைகள் மற்றும் எள் 100, வேர்க்கடலை 70 உட்பட 702 மூட்டைகள் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில், பி.பி.டி., 2,069 ரூபாய்க்கும், ஏ.எஸ்.டி., 1,609 ரூபாய்க்கும் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி