உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மர பட்டறையில் தீ விபத்து

மர பட்டறையில் தீ விபத்து

குறிஞ்சிப்பாடி: மர பட்டறையில் தீப்பிடித்ததில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்,42; குறிஞ்சிப்பாடி ரயில்வே ஸ்டேஷன் அருகில் மரப்பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 25ம் தேதி மாலை பட்டறையை மூடிவிட்டு சென்றார். இந்நிலையில் நேற்று (நவ.,25) அதிகாலை மரப்பட்டடை தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், பட்டறையில் இருந்த ரூ.,2 லட்சம் மதிப்புள்ள மர பொருட்கள் மற்றும் தளவாட பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை