மேலும் செய்திகள்
தீயணைப்புத்துறை செயல் விளக்க பயிற்சி
27-Oct-2024
பெண்ணாடம் : பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் பணியாளர்களுக்கு தீ விபத்து தடுப்பு குறித்து ஒத்திகை விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோவில் செயல் அலுவலர் மகாதேவி தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் கோவில் பணியாளர்களுக்கு தீ விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீ ஏற்பட்டால் அவற்றை அணைக்கும் வழிமுறைகள் குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.
27-Oct-2024