உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜான்டூயி பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு

ஜான்டூயி பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு

பண்ருட்டி: பண்ருட்டி த நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பண்ருட்டி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் நடந்த பேரிடர் மற்றும் தீ தடுப்பு முறை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஜூனியர் ரெட்கிராஸ் ஜான்சன் வரவேற்றார். பள்ளி முதல்ர் உமாசம்பத், தலைமையாசிரியர் பாலு முன்னிலை வகித்தனர்.தீயணைப்பு நிலைய அலுவலர் சதாசிவம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமலைவாசன், லோகநாதன், சத்யராஜ், கிருஷ்ணகோபால், ஐயப்பன், கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் குழுவினர் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு செயல் விளக்கம் அளித்தனர்.சிறப்பு விருந்தினராக நித்தின் ஜோஸ்வா கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ