மேலும் செய்திகள்
மொபட் தீப்பிடித்து எரிந்து சேதம்
22 hour(s) ago
ராமநத்தம்: மின் கசிவு காரணமாக வயலில் குவித்து வைத்த மக்காச்சோளம் தீயில் கருகியது. வேப்பூர் அடுத்த கல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மனைவி ஜமுனா, 45; விவசாயி. இவருக்கு ஆவட்டி அருகே 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில், மக்காச்சோளம் சாகுபடி செய்த நிலையில், கடந்த சில நாட்களாக அறுவடை பணி நடக்கிறது. அறுவடை செய்த மக்காச்சோளத்தை வயலின் ஒரு பகுதியில் குவித்து வைத்தனர். இந்நிலையில், நேற்று இரவு 7:00 மணியளவில் அவரது வயலின் மேல் செல்லும் உயர் மின்னழுத்த கம்பியில் மின் கசிவு ஏற்பட்டு, குவித்து வைத்த மக்காச்சோளத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதனையறிந்து வந்த நடராஜன் மனைவி ஜமுனா மற்றும் அவரது உறவினர்கள் தீயை அணைத்தனர்.இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
22 hour(s) ago