உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலில் மூழ்கி மீனவர் பலி

கடலில் மூழ்கி மீனவர் பலி

கிள்ளை : கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய மீனவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். கிள்ளை, தெற்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி, 65; இவர், சின்னவாய்க்கால் பகுதியை சேர்ந்த ராமன் என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து விட்டு நேற்று கரைக்கு திரும்பினார். பிச்சாவரம் வனப்பகுதி அருகே வந்த போது, படகில் இருந்து மூர்த்தி, தவறி தண்ணீரில் விழுந்தார். இதில், அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து, அவரது மகன் குணசேகரன் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ