உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருதரப்பு மீனவர்கள் வாக்குவாதம்; கடலுார் அருகே பதற்றம்

இருதரப்பு மீனவர்கள் வாக்குவாதம்; கடலுார் அருகே பதற்றம்

கடலுார்; கடலுார் அருகே மீனவ கிராமத்தில் ஊர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இருதரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர். கடலுார் அடுத்த சோனங்குப்பத்தில் மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும், பொதுமக்கள் ஒன்றுகூடி ஊர் தலைவரை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஊர் தலைவர் பதவி முடிவடைந்த நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்ய நேற்று காலை பொதுமக்கள் ஒன்று கூடினர். அப்போது ஏற்கனவே உள்ள நிர்வாகத்தினரே தொடர வேண்டும் என, ஒரு தரப்பினரும், நடைமுறைப்படி ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறி மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த கடலுார் முதுநகர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இதையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை