உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மீன்பிடி தொழிலாளர் சங்கம் கலெக்டர் ஆபீசில் முற்றுகை

மீன்பிடி தொழிலாளர் சங்கம் கலெக்டர் ஆபீசில் முற்றுகை

கடலுார்: கடலுார் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பரங்கிப்பேட்டை அடுத்த சின்னுார் தெற்கு, சின்னுார் வடக்கு, சி.புதுப்பேட்டை, இந்திரா நகர் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் மற்றும் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். பின், சின்னுார் தெற்கு, வடக்கு, சி.புதுப்பேட்டை, இந்திரா நகர் கிராமங்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்கின்றனர். இப்பகுதியில் அதிகார அத்துமீறலில் ஈடுபடும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.புதுப்பேட்டை மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக ளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையேற்று போராட்டம் கைவிடப்பட்டது. பின், மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை