பலத்த காற்று எதிரொலி கடலுாரில் மீன்பிடிக்க தடை
கடலுார் : கடலுார் அருகே கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.வங்கக்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டு தோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடிதடைக்காலம் அறிவிக்கப்படும். தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது மற்றும் வலை பின்னுதல் உள்ளிட்ட பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்றுடன் தடைக்காலம் முடிவடைவதால் நள்ளிரவில் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்காக மீனவர்கள் தயாராகிவந்தனர்.இந்நிலையில், கடலுார் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல்50 கி.மீ.,வேகத்திற்கு மேல் காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என நேற்று கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.