உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீப்பற்றி எறிந்த மீன்பிடி படகு: கடலூர் துறைமுகத்தில் பரபரப்பு

தீப்பற்றி எறிந்த மீன்பிடி படகு: கடலூர் துறைமுகத்தில் பரபரப்பு

கடலூர்: கடலூர் துறைமுகத்தில் நிறுத்தி வைத்த மீன்பிடி படகு திடீரென்று தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியதுகடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்ற மீனவர் தனக்கு சொந்தமான மீன்பிடி படகை, கடலூர் துறைமுகம் சலங்கை நகரில் உள்ள உப்பனாற்றில் நிறுத்தி வைப்பது வழக்கம். அந்த வகையில் சுரேஷ் தனது படகை துறைமுகம் உப்பனாற்றில் நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென அந்த படகு தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துறைமுகம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பலத்த காற்று வீசியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் படகின் பெரும்பகுதி எரிந்து சேதமானது. மேலும் படகில் இருந்த வலை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மொத்த சேத மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை