ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம்
கடலுார்: கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் பிரம்மோற்சவ திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் மாலை விநாயகர் பூஜை நடந்தது. நேற்று காலை கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.