கொடியேற்று விழா
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு பணிமனையில் அம்பேத்கர் எஸ்.சி., எஸ்.டி., தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் பெயர் பலகை மற்றும் கொடியேற்று விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, மாநில பொருளாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராஜசேகர், தகவல் மற்றும் பாதுகுாப்பு பிரிவு மாநில தலைவர் கல்யாணகுமார் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் ரவி கொடியேற்றி, இனிப்பு வழங்கினார்.மாநில தலைமை செயலாளர் சங்கர், பிரசார செயலாளர் மோகன்தாஸ், விருத்தாசலம் பணிமனை தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் அருமைநாதன், அமைப்புச் செயலாளர் வெற்றிச்செல்வன், துணைத்தலைவர் வீரமணி, துணை செயலாளர்கள் ஆறுமுகம், முத்துக்குமரன் உட்பட உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.