வெள்ள பாதிப்பு: அமைச்சர் நிவாரணம்
நெல்லிக்குப்பம் : வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு அமைச்சர் நிவா ரண உதவிகள் வழங்கினார்.தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அமைச்சர் கணேசன், கடந்த இரு நாட்களாக, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண உதவி வழங்கி வருகிறார்.நேற்று குடிதாங்கி சாவடி, சோழவல்லி பகுதிகளை பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது சேர்மன் ஜெயந்தி, தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் மணிவண்ணன், துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதி வேலு உடனிருந்தனர்.