மேலும் செய்திகள்
கடலுார் சிறை கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு
12-Jan-2025
கடலுார் : கடலுாரில், பூ வியாபாரியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் ராமு மகன் அரவிந்த், 29; மஞ்சக்குப்பத்தில் பூக்கடை வைத்திருந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் பரமசிவம் நகரில் மது அருந்தினார். அப்போது, அருகில் மது அருந்திக் கொண்டிருந்த மஞ்சக்குப்பத்தை சேர்ந்த ஜெயபால் மகன் பாலாஜி, 26; என்பவருக்கும் அரவிந்திற்கும் போதையில் தகராறு ஏற்பட்டது.போதை தலைக்கேறிய நிலையில் இருந்த பாலாஜி, மறைத்து வைத்திருந்த கத்தியால் அரவிந்தை பின் தலை, முகத்தில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அரவிந்தை, நண்பர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.இதுகுறித்து அரவிந்த் தாய் அமுதா அளித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்தனர். டி.எஸ்.பி., ரூபன்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரன் தலைமையிலான போலீசார், பாலாஜியை தேடி வந்தனர். இந்நிலையில் போதையில் இருந்த பாலாஜி போலீசாருக்கு பயந்து ஓடும் போது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அதே பகுதியில் பதுங்கியிருந்தபடி, நண்பருக்கு போன் செய்துள்ளார். அவர்கள் பாலாஜியை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.பாலாஜி மருத்துவமனையில் இருக்கும் தகவல் அறிந்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். இவர் மீது கஞ்சா உட்பட 3 வழக்குகள் உள்ளன.
12-Jan-2025