விருத்தாசலம் சுவீட் கடைகளில் உணவு பாதுகாப்பு குழு ஆய்வு
கடலுார்: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சுவீட் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில், விருத்தாசலம் பகுதி சுவீட் ஸ்டால்கள் மற்றும் தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லத்தம்பி தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது இனிப்பு மற்றும் பலகாரங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை சேர்க்கக்கூடாது. பணியாளர்கள் மருத்துவ தகுதிச்சான்று பெற்றிருக்க வேண்டும். பணியாளர்கள் அனைவரும் கையுறை, தலைமுடி கவசம் அணிந்திருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது. ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.இனிப்பு காரப் பொருட்களை அச்சிட்ட பேப்பரில் மடித்து கொடுக்கக் கூடாது, பட்டர் பேப்பர் அல்லது வெள்ளை தாள்களை தான் பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினர்.உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர்.