உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் பஸ் நிலையத்தை மாற்றியதுதான் சாதனை; தி.மு.க., அரசு மீது மாஜி அமைச்சர் சாடல்

கடலுாரில் பஸ் நிலையத்தை மாற்றியதுதான் சாதனை; தி.மு.க., அரசு மீது மாஜி அமைச்சர் சாடல்

கடலுார்; கடலுார் மாநகராட்சி பகுதியில் அமைய இருந்த பஸ் நிலையத்தை மாற்றிய அமைத்ததுதான் தி.மு.க., அரசின் சாதனை என முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார். கடலுாரில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மஞ்சக்குப்பத்தில் நடந்த அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் குமார் வரவேற்றார். பகுதி செயலாளர் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், தங்க வினோத்ராஜ், காசிநாதன், நகர செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், தலைமை கழக பேச்சாளர் ஹமிதா ஆகியோர் பேசினர். வடக்கு மாவட்ட செயலாளர ,முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமை தாங்கி பேசியதாவது: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை. பல்வேறு இயற்கை சீற்றங்கள் புயல், மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் கொரோனா என கடலுார் மாட்டம் பாதிக்கப்பட்ட போது முன்னாள் முதல்வர் பழனிசாமி ஓடி வந்து, பல்வேறு திட்டங்களை அறிவித்து நிறைவேற்றார். தி.மு.க., ஆட்சியில் கடலுார் மாவட்டத்திற்கு என்ன சாதனை செய்தார்கள் என பார்த்தால், கடலுார் மாநகராட்சி பகுதியில் அமைய இருந்த பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர். அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மாநகராட்சி பகுதியில் பஸ் நிலையம் மாற்றப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினா். கூட்டத்தில் முன்னாள் சேர்மன் சுப்ரமணி, ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், கார்த்திக், வினோத்ராஜ், மீனவரணி தங்கமணி, இளைஞரணி திரு, கலையரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி