மாஜி சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி-
சிதம்பரம்; வடலுாரில் 1972 ல் தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்தவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அன்றைய தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போது, 1972-ம் ஆண்டு தமிழக காவல் துறையில், காவலர்களாக பணியில் சேர்ந்தவர்கள் 50 பேர், சப் இன்ஸ்பெக்டர்களாக பணி ஓய்வு பெற்று, தற்போது 75 வயதில் உள்ளனர். அவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது . வடலூரில் உள்ள தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கட்டிடத்தில், நடந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு, ஓய்வு சப் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமை தாங்கினார். ஞானப்பிரகாசம், நாராயண பிள்ளை, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ராமலிங்கம், கோபாலகிருஷ்ணன், மணி, துரைராஜ், ராமசாமி, சுந்தரமூர்த்தி, லட்சுமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜெயக்குமார், துரைமணி ஆகியோர் அன்றைய காவல் துறை பணிகள் மற்றும் இன்றை காவல் துறை பணிகள் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முனுசாமி நன்றி கூறினார்.