உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ளம் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் தமிழக காங்., முன்னாள் தலைவர் வலியுறுத்தல்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் தமிழக காங்., முன்னாள் தலைவர் வலியுறுத்தல்

கடலுா; வெள்ள பாதிப்பிற்கு, அரசை குறை கூற முடியாது என தமிழக காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். கடலுாரில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய அவர் கூறியதாவது:கடலுார் வடிகால் மாவட்டமாக உள்ளதால் புயல் மற்றும் மழையால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வு தேவை. அனைத்து தரப்பு மக்களுக்கும் கருணை அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும்.மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற அமைச்சர் மீது சேற்றை வீசியது தவறு. சாத்தனுார் அணை திறந்ததால் தான் பாதிப்பு ஏற்பட்டது என்பதை ஏற்க முடியாது. அணை நிரம்பியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் திறக்கப்பட்டது. வெள்ள பாதிப்பிற்கு அரசை குறை கூற முடியாது.வரலாறு காணாத மழை பெய்ததால் கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக மத்திய அரசு அறிவித்து, நிவாரண தொகை ரூ.2,000 கோடி வழங்க வேண்டும். வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசுக்கும் கூடுதல் பொறுப்பு உள்ளது. வெள்ள பாதிப்பு நிவாரணம் ரூ.2,000 போதுமானதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ