மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
07-Sep-2024
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீநெடுஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நான்கு பள்ளிகளுக்கான தமிழக அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் அழகு செல்வம் தலைமை தாங்கினார். ஒன்றிய கல்விக்குழு தலைவர் தங்க ஆனந்தன், ஸ்ரீமுஷ்ணம் அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி, பேசினார். இதில் ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, கானுார் அரசு மேல்நிலைப்பள்ளிகள், த.வீ.செ. மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 378 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர்கள் சிகாமணி, குமரேசன், பழமுதிர்ச்சோலை பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். ஆசிரியர் நாவலன் நன்றி கூறினார்.
07-Sep-2024