இலவச மருத்துவ முகாம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஏ.ஜி.பி., பிரிமியர் குருப்ஸ் மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவன மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமினை, ஏ.ஜி.பி., குரூப்ஸ் நிறுவனர் அன்வர் பாஷா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில், புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவன மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி சிகிச்சை அளித்தனர். இதில், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.