என.எல்.சி.,யில் வேலை வாங்கி தருவதாக மோசடி : தலைமறைவு நபர் கைது
மந்தாரக்குப்பம்: என்.எல்.சி., யில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.கடலுார் மாவட்டம். ஊமங்கலம் சமுட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்,43;. இவர் என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், என்.எல்.சி.,யில் வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த அன்பழகனை தேடி வந்தனர். நேற்று, ஊமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் அன்பழகனை அவரது வீட்டில் கைது செய்தனர்.அப்போது உறவினர்கள் அவரை அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அதை தொடர்ந்து அன்பழகனிடம் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.அன்பழகன் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு ஊமங்கலம், நெய்வேலி டவுன்ஷிப், தெர்மல் காவல் நிலையங்களில் உள்ளது.