உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவானவர் கைது

கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவானவர் கைது

நெல்லிக்குப்பம்.: கஞ்சா கடத்தில் வழக்கில் தலைமறைவானவரை ஒரு மாதத்திற்கு பின் போலீசார் கைது செய்தனர். எஸ்.பி., யின் தனிப்படை போலீசார் கடந்த அக்.3ம் தேதி கடலூர் கஸ்டம்ஸ் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே நடந்து வந்த வாலிபர்களை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 4.7 கிலோ கஞ்சா இருந்தது. உடன், இருவரிட் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். சென்னை, ஆவடியை சேர்ந்த ஐசக் மகன் ராகேஷ்,24; என்பவரை கைது செய்த, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தப்பியோடியவர், பண்ருட்டி புதுப்பேட்டையை சேர்ந்த முத்து மகன் யுவராஜ்,23; என்பது தெரிய வந்தது. நீண்ட தேடுதலுக்கு பின், தலைமறைவாக இருந்த யுவராஜை தனிப்டை போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ