உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மோசடி வழக்கில் தலைமறைவானவர் கைது

மோசடி வழக்கில் தலைமறைவானவர் கைது

விருத்தாசலம்: மோசடி வழக்கில் ஓராண்டாக ஆஜராகாமல் தலைமறைவானவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், அம்மா பேட்டை, வித்யா நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி,56; இவர்மீது விருத்தாசலம் போலீசார் கடந்த 2017ம் ஆண்டு மோசடி வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை விருத்தாசலம் மாஜிஸ்திரேட் கோர்ட்–1ல் நடந்து வருகிறது. இவ்வழக்கில் ஜாமினில் வெளிய வந்த வேலுச்சாமி, கடந்த ஓராண்டாக வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து, விருத்தாசலம் போலீசார், வேலுச்சாமியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை