உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தலைமறைவு ஆசாமி கைது

தலைமறைவு ஆசாமி கைது

கடலுார்:வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானரை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த மா.புளியங்குடியை சேர்ந்தவர் ராமசாமி மகன் அன்பரசன்,38; இவர் கடந்த 2023ம் ஆண்டு சாட்சியை மிரட்டிய வழக்கில் குமராட்சி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் ஜாமினில் வந்த அன்பரசன், சிதம்பரம் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதனையொட்டி மாஜிஸ்திரேட் பிடியாணை பிறப்பித்தார். அதன்பேரில் தலைமறைவாக இருந்த அன்பரசனை குமராட்சி போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !