உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிதி

இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிதி

ஸ்ரீமுஷ்ணம்: குளத்தில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம், வக்கரைமாரி, மேட்டுத் தெருவை சேர்ந்தவர் நிசாருல்லா, 45; இவரது மகன் அப்துல் ஆசிம்,11; இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்தார். கடந்த 26ம் தேதி குன்னத்தேரியில் அப்துல் ஆசிம் குளித்த போது, நீரில் மூழ்கி இறந்தார். சிறுவன் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேற்று சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார் வழங்கி ஆறுதல் கூறினார். தாசில்தார் இளஞ்சூரியன், வருவாய் ஆய்வாளர் தங்கம், வி.ஏ.ஓ., சிவசங்கர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை