உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாரியம்மன் கோவிலில் 18ம் தேதி செடல்

மாரியம்மன் கோவிலில் 18ம் தேதி செடல்

கடலுார்; கடலுார் துறைமுகம், கோட்டை மாரியம்மன் கோவிலில் வரும் 18ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது.கடலுார் துறைமுகம், கோட்டை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவத்தை முன்னிட்டு இன்று (16ம் தேதி) காலை கணபதி ஹோமம், விநாயகர் பூஜை, கொடியேற்றம் நடக்கிறது.நாளை 17ம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடக்கிறது. 18ம் தேதி காலை செடல் உற்சவமும் தொடர்ந்து சாகை வார்த்தலும் நடக்கிறது.இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 20ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி