உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுடுகாட்டு பாதை இல்லாததால் நிலத்தின் வழியாக சவ ஊர்வலம்

சுடுகாட்டு பாதை இல்லாததால் நிலத்தின் வழியாக சவ ஊர்வலம்

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் அருகே சுடுகாட்டுப்பாதை இல்லாததால் கிராம மக்கள் நிலத்தின் வழியாக சடலத்தை சுமந்து சென்றனர். கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ நெடுஞ்சேரி கிராமத்தில் 50 குடும்பங்களை சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் யாரேனும் இறந்தால் அருகில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்று எரிப்பது வழக்கம். சுடுகாட்டிற்கு செல்ல தனியாக சாலை இல்லாததால் அருகில் உள்ள நிலங்களின் வழியே இறந்தவர் உடலை எடுத்துச் செல்கின்றனர். இப்பகுதி மக்கள் சுடுகாட்டு பாதை அமைக்க பல முறை வலியுறுத்ததின் பேரில், கடந்த 2018ம் ஆண்டு வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து பாதை அமைக்க இடம் ஒதுக்கீடு செய்தனர். பின், பாதை அமைக்கும் பணி ஒரு சிலரின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, சுடுகாட்டு பாதை அமைக்க 2022-23ம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், சாலை பணி துவங்கவில்லை. நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த ராஜவேல் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இவரின் உடலை கிராம மக்கள், உறவினர்கள் நிலத்தின் வழியாக சுமந்து சேற்றில் நடந்து சென்ற அவலம் அரங்கேறியது. பாதை அமைக்க இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை