உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூதாட்டம் 5 பேர் கைது

சூதாட்டம் 5 பேர் கைது

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே காசு வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், ரவிக்குமார் தலைமையி லான போலீசார் நேற்று பெரிய கண்டியங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, விருத்தாசலம் இந்திராநகரை சேர்ந்த சம்சுதீன், 59; வயலுார் பழமலை, 55; வடக்கு பெரியார் நகர் சிவக்குமார், 49; அண்ணாநகர் ராஜசேகர், 50; வடக்கு பெரியார் நகர், திருக்குறள் வீதி திருமுருகன், 59 ஆகியோர் காசு வைத்து சூதாடியது கண்டு பிடிக்கப்பட்டது.இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சம்சுதீன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ