காந்தி ஜெயந்தி விழா
கடலுார் : கடலுார் கிழக்கு மாவட்ட கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.மாவட்ட பொறுப்புத் தலைவர் முகமதுஷெரீப் தலைமை தாங்கி, கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மண்டல தலைவர் செந்தமிழ்கொற்றவன், துணைத் தலைவர்கள் கணேசமூர்த்தி, முருகேசன், மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொருளாளர் குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுரவ ஆலோசகர் ஜெயக்குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் பாலமுருகன், முத்துக்குமரன், பி.ஆர்.ஓ., கோவிந்தராசன், மாவட்ட துணை செயலாளர்கள் நிர்மல்ராஜ், ஆறுமுகம், முதுநகர் மைய தலைவர் செல்வம், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.