உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில், விநாயகர் சதுர்த்தி குழுவினருக்கு, விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., ராதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் இளவழகி முன்னிலை வகித்தார். விநாயகர் சிலை வைப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். சிலை வைக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்காத மேற்கூரை அமைக்க வேண்டும். மண்ணால் செய்யப்பட்ட அல்லது எளிதில் கரையக்கூடிய பொருட்களால் செய்யப்பட்ட சிலை மட்டுமே வைக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட உயரத்திற்கு மேல் சிலைகள் இருக்கக்கூடாது. விநயாகர் சிலைகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து சென்று கரைக்க வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என, விநாயகர் சதுர்த்தி திருவிழா குழுவினருக்கு போலீசார் ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் சேகர், கவிநிலவன், தனிப்பிரிவு ஜோதிமணி உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி