மேலும் செய்திகள்
கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது
10-Apr-2025
கடலுார் : கஞ்சா வியாபாரியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், கடந்த மார்ச் 8ம் தேதி, மீனாட்சி பேட்டை பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே வந்த சந்தேகத்திற்குரிய காரை நிறுத்தி சோதனை செய்ததில், 10 கிலோ 500 கிராம் கஞ்சாவை நான்கு பேர் கடத்தி வந்தது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார், குறிஞ்சிப்பாடி நவீன், 27; அய்யப்பன், 26; ஒடிசாவைச் சேர்ந்த தீபாசுனா, 29; நரேந்திர பட்ரா, 29; ஆகியோரை கைது செய்தனர்.எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையின்படி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்படி, கடலுார் மத்திய சிறையில் உள்ள நவீனின் தொடர் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு அவரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கி கைது செய்தனர்.
10-Apr-2025